2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அரச வருமானம் அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்தை விட அதிக வருமானத்தை ஈட்ட முடிந்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
குறித்த காலப்பகுதியில் நாட்டின் பிரதான வருமானம் ஈட்டக்கூடிய இலங்கை சுங்கம் மற்றும் கலால் வரி திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக 834 பில்லியன் ரூபா ஈட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை விட 6% வருமான அதிகரிப்பாக காணப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டிற்குள் 4,106 பில்லியன் ரூபா அரச வருமானம் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
200 Views
Comments