இராணுவ கெப் வாகனத்துடன் லொறி மோதி விபத்து; இராணுவ சிப்பாய் உயிரிழப்பு, 9 பேர் காயம்

முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வசந்தநகர் சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாங்குளத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த லொறி, முன்னால் பயணித்த இராணுவ சிப்பாய்களை ஏற்றிச்சென்ற கெப் ரக வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று (26) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் கெப் வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மேலும் 9 சிப்பாய்கள் சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எஹட்டுவெவ - கல்கமுவ பகுதியை சேர்ந்த 39 வயதான சிப்பாய் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
208 Views
Comments