தபால் திணைக்களத்திற்கு இணையான போலி இணையத்தளங்களை நீக்க நடவடிக்கை

தபால் திணைக்களத்தின் இணையத்திற்கு இணையாக காணப்படும் போலி இணையத்தளங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு எச்சரித்துள்ளது.
இவ்வாறான 5 போலி இணையத்தளங்களை இணையத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.
இவ்வாறான இணையத்தளங்களுக்குள் பிரவேசித்து 35 பண மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
247 Views
Comments