தியத்தலாவ கார் பந்தயத்தில் விபத்து ; 7 பேர் உயிரிழப்பு

தியத்தலாவ Foxhill கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.
தியத்தலாவ Foxhill கார் பந்தயத் திடலில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் 21 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
Foxhill 2024 கார் பந்தயத்தின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
போட்டியில் பங்கேற்ற காரொன்று திடலை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
240 Views
Comments