மஹவ - அனுராதபுரம் ரயில் மார்க்கத்திற்கு சமிக்ஞை கட்டமைப்பை வழங்க இந்தியா இணக்கம்

மஹவ முதல் அனுராதபுரம் வரை நிர்மாணிக்கப்படுகின்ற புதிய ரயில் மார்க்கத்திற்காக புதிய சமிக்ஞை கட்டமைப்பை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
புதிய சமிக்ஞை கட்டமைப்பு கணினியினூடாக செயற்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் H.M.K.W.பண்டார தெரிவித்தார்.
இதற்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளது.
இந்திய கடனுதவியின் கீழ் குறித்த சமிக்ஞை கட்டமைப்பு நாட்டிற்கு கிடைக்கவுள்ளது.
இது தொடர்பில் இந்திய பிரதிநிதிகளுடன் அண்மையில் தாம் இந்தியாவில் கலந்துரையாடியதாக ரயில்வே பொது முகாமையாளர் H.M.K.W.பண்டார தெரிவித்தார்.
234 Views
Comments