மல்வத்துஹிரிபிட்டிய தேரர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
12

மல்வத்துஹிரிபிட்டிய தேரர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு

மல்வத்துஹிரிபிட்டிய தேரர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய விகாரையில் தேரர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

அத்தனகல்ல - யட்டவத்த பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தேடுவதற்காக சென்றிருந்தபோது சந்தேகநபர் தப்பிச்செல்ல முற்பட்ட போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய கஹடான ஸ்ரீ கனாராம விகாரையைச் சேர்ந்த தேரரொருவர், கடந்த ஜனவரி 23ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் குறித்த நபர், மொனராகலை - ஹம்பேகமுவ பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார். 

அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 32 வயதான சந்தேகநபர் குறித்த பகுதியில் இருப்பதாக ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்டிருந்தார்.

views

237 Views

Comments

arrow-up