டிப்பர் - மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அருட்தந்தை உயிரிழப்பு

மன்னார் - அடம்பன் சந்தியில் நேற்று(04) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் அருட்தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த அருட்தந்தை, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
226 Views
Comments