வெல்லவாயவில் பஸ் விபத்திற்குள்ளானதில் 11 பேர் காயம்

வெல்லவாய பகுதியில் பஸ்ஸொன்று விபத்திற்குள்ளானதில் 5 சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
உல்கந்த பகுதியிலிருந்து வெல்லவாய நோக்கி பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
209 Views
Comments