பஸ் கட்டணங்கள் 5% குறைக்கப்படவுள்ளன

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்களை 5 வீதத்தால் குறைக்க பஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
போக்குவரத்து அமைச்சில் இன்று (28) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பஸ் சங்கங்களை சேர்ந்தவர்களும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.
புதிய பஸ் கட்டண திருத்தத்தின் பிரகாரம், குறைந்தபட்ச பஸ் கட்டணமாக 28 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.
219 Views
Comments