முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இம்மாதம் முதல் வழங்கப்படுமென அறிவிப்பு

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இம்மாதம் முதல் வழங்கப்படும் என மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களுக்கு விசேட சுற்றறிக்கை ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் யமுனா பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போது 2,500 ரூபாவாக காணப்படும் கொடுப்பனவை 5,000 ரூபாவாக அதிகரிக்க அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
245 Views
Comments