யாழ். நயினாதீவில் உலக இளைஞர் பௌத்த சங்கம், உலக பௌத்த முன்னணியின் வருடாந்த மாநாடு

உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு யாழ்ப்பாணம் நயினாதீவில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் நயினாதீவு நாகதீப ரஜமஹா விகாரையில் உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடும் இன்று நடைபெற்றது.
மத அனுஷ்டானங்களுடன் இன்றைய மாநாடு ஆரம்பமானது.
பௌத்த அமைப்புகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தல், இளம் தலைமுறையினரிடையே மதத்தின் விழுமியங்களை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டு இன்றைய மாநாடு நடைபெற்றது.
கலை நிகழ்வுகளும் விழாவை அலங்கரித்தன.
மாநாட்டில் நினைவு முத்திரையொன்றும் இன்று வௌியிடப்பட்டது.
உலக இளைஞர் பௌத்த சங்க சபை மற்றும் உலக பௌத்த முன்னணியின் தலைவர்கள் தமது அமைப்பு தொடர்பிலும் எதிர்காலத் திட்டம் தொடர்பிலும் மாநாட்டில் உரையாற்றினர்.
நாகதீப ரஜமகா விஹாரையின் விகாராதிபதி நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரர், யாழ். மாவட்ட செயலாளர் M.பிரதீபன், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, வட பிராந்திய கடற்படைத் தளபதி ரோஹித்த அபேசிங்க, யாழ்ப்பாண புத்தசாசன பேரவையின் செயலாளர் உள்ளிட்ட பலரும் மாநாடில் பங்கேற்றனர்.
249 Views
Comments