மியன்மார் சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை

மியன்மார் சைபர் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 49 இலங்கையர்களில் சிலரை எதிர்வரும் நாட்களில் விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்துள்ளார்.
மியன்மார் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
மியன்மார் சைபர் முகாம்களில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதில் 53,000 பேர் சீனர்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்தார்.
255 Views
Comments