சர்வதேச தந்தையர் தினம் இன்று(16)
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
16

சர்வதேச தந்தையர் தினம் இன்று(16)

சர்வதேச தந்தையர் தினம் இன்று(16)

சர்வதேச தந்தையர் தினம் இன்றாகும்.

 

ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் சூப்பர் ஹீரோ அப்பா தான்.

 

குடும்பத்திற்காக மாடாய் உழைத்து ஓடாய் தேய்வதுடன், கனிவான கண்டிப்பையும் மறைமுகமான பாசத்தையும் வெளிப்படுத்தும் தந்தையிடம் குழந்தைகளுக்கும் பாசம் எப்போதும் குறைவதில்லை.

 

1910 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் திகதி முதல் தந்தையர் தினம் அமெரிக்காவில் மிஸ் சோனோரா ஸ்மார்ட் டூவின் தந்தையை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்பட்டது.

 

சனோராவின் தந்தை வில்லியம் ஸ்மார்ட் ஒரு உள்நாட்டு போர் வீரர். வில்லியம் ஸ்மார்ட்டின் மனைவி ஆறாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரத்தில் அவர் இறந்துவிட்டார்.

 

அவரது மகள் சனோரா தனது தந்தையின் நினைவாக ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று தந்தையர் தினத்தை கொண்டாடினார்.

 

இன்றைய தினம் தந்தையை போற்றும் அவர்களது தியாகங்களை பாராட்டும் அனைத்து மகள்களும் மகன்களும் அப்பாக்களின் தன்னலமற்ற கனவுகளை, நியாயமான ஆசைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் பூர்த்திசெய்யவும் உறுதி, மனத்திடத்தோடு எதிர்காலத் திட்டங்களை வகுக்கவேண்டிய கடமையை நினைவுபடுத்தும் நாள் இதுவாகும். 

 

நம் தந்தை, நமக்காக படும் கஷ்டங்களை அவருடைய கைகளை பார்த்தால் புரிந்துவிடும்...

 

ஒரு அப்பாவின் கோபத்தையும் கண்டிப்பையும் மறந்துவிட்டு, அவரை வழிநடத்துநராக, பாதுகாவலராக கண்ணுற்றால், அப்பாக்கள் விண்ணுக்கும் மண்ணுக்குமாக உயர்ந்து நிற்பவர்கள் என்கிற நிதர்சனம் பிள்ளைகளிடத்தில் வெளிப்படும்.   

 

அனைத்து தந்தையர்க்கும் நியூஸ்ஃபெஸ்ட்டின் தந்தையர் தின வாழ்த்துகள்...

views

245 Views

Comments

arrow-up