உறை நிலைக்கு சென்றுள்ள ரஷ்ய தலைநகரம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
13

உறை நிலைக்கு சென்றுள்ள ரஷ்ய தலைநகரம்

உறை நிலைக்கு சென்றுள்ள ரஷ்ய தலைநகரம்

ரஷ்யாவை கடுமையான பனிப்புயல் தாக்கி வருகின்றமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

 

இந்நிலையில், ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் வெப்பநிலை உறை நிலைக்கு சென்றுள்ளது.

 

அத்துடன், அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாமல் அந்நாட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

 

கடும் குளிரால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு அதனை சமாளிக்கு வகையில் வழங்கப்பட்டு வந்த ஹீட்டர் சேவைகளும் கடந்த சில நாட்களாக இயங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

 

அதேவேளை, உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் ஹீட்டர் சேவை வழங்கி வரும் ஆலையில் விதிமீறிலில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மின் கம்பிகளில் அதிகப்படியான பனி மூடியிருப்பதால் பொதுமக்கள் மின் சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். 

 

மேலும், பிரித்தானியாவில் 14 ஆண்டுகள் இல்லாத வரலாறு காணாத பனிப்புயல் மற்றும் கடும் குளிர் ஏற்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

views

52 Views

Comments

arrow-up