மாலைதீவில் அந்நிய தலையீடுகளை கடுமையாக எதிர்க்கும் சீனா!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
12

மாலைதீவில் அந்நிய தலையீடுகளை கடுமையாக எதிர்க்கும் சீனா!

மாலைதீவில் அந்நிய தலையீடுகளை கடுமையாக எதிர்க்கும் சீனா!

மாலைதீவின் உள்விவகாரங்களில் அந்நிய தலையீடுகளுக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்த சீனா, நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதில் மாலைதீவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது

 

சீனாவின் ஆதரவு பெற்ற முகமது மூயிஸ் கடந்த நவம்பர் மாதம் மாலைதீவின் புதிய அதிபராக பதவியேற்ற நிலையில், சீனாவுக்கு முதல்முறையாக உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளாா்.

 

இந்தப் பயணத்தில் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தையில் அவா் ஈடுபட்டாா். இந்தப் பேச்சுவாா்த்தையின்போது இரு நாடுகளுக்கு இடையே 20 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

 

இந்நிலையில், மாலைத்தீவு அதிபரின் சீனப் பயணத்தையொட்டி வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

 

இரு நாடுகளின் நலன்களைப் பாதுகாப்பதில் தொடா்ந்து உறுதியான ஆதரவை வழங்க இருதரப்பும் ஒப்புக்கொண்டது. தேசிய இறையாண்மை, சுதந்திரம், கண்ணியம் மற்றும் மரியாதை நிலைநிறுத்தப்படுவதில் மாலைதீவுக்கு சீனா ஆதரவு அளிக்கும்.

 

அந்நாட்டுச் சூழலுக்கேற்ப வளா்ச்சிப் பாதையை ஆராய்வதில் மாலத்தீவுக்கு சீனா உதவி செய்யும். அந்நாட்டின் உள்விவகாரங்களில் அந்நிய தலையீடுகளை சீனா கடுமையாக எதிா்க்கும்.

 

சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குறைத்து மதிப்பிடும் எந்தவொரு செயலையும் மாலைதீவு எதிா்க்கிறது.

 

தைவான் பிரிவினைவாத நடவடிக்கைகளை எதிா்க்கும் மாலைதீவு, அந்தப் பிராந்தியத்துடன் எந்த வகையான ராஜீய உறவுகளையும் வளா்க்காது.

 

தேசிய மறு ஒருங்கிணைப்பை அடைய சீனா முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளையும் மாலைதீவு ஆதரிக்கிறது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், இந்தியா மற்றும் பிரதமா் மோடிக்கு எதிராக சமூக ஊடகத்தில் வெளியிட்ட அவதூறு கருத்துகளால் மாலைதீவு அமைச்சா்கள் மூவா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

 

கடந்த அதிபா் தோ்தலில், இந்திய விரோதப்போக்கு பிரசாரத்தில் தற்போதைய ஆளும் கூட்டணி ஈடுபட்டதாகவும் ஐரோப்பிய ஒன்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாலைதீவு அதிபரின் சீனப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

views

42 Views

Comments

arrow-up