ஆண்டின் ICC Hall of Fame வீரர் விருதில் குமார சங்கக்கார தேர்வு செய்யப்பட்டார்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
14

ஆண்டின் ICC Hall of Fame வீரர் விருதில் குமார சங்கக்கார தேர்வு செய்யப்பட்டார்

ஆண்டின் ICC Hall of Fame வீரர் விருதில் குமார சங்கக்கார தேர்வு செய்யப்பட்டார்

இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் சபையின் ICC Hall of Fame பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

18 ஆம் திகதி தொடங்கும் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியுடன் இந்த விசேட Hall of Fame பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

 

குமார் சங்கக்கார உள்ளிட்ட பத்து சிறந்த வீரர்கள் இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் Hall of Fame பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

அதன்படி, கிரிக்கெட்டின் ஐந்து காலங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் சம்பந்தப்பட்ட இரண்டு வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

குமார் சங்கக்கார 1996 முதல் 2015 வரையான Hall of Fame இல் சேர்க்கப்பட்டார்.

 

அதன்படி, தற்போது 103 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 'Hall of Fame' பட்டியலில் உள்ளனர்.

 

இப்பட்டியலில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

01. Aubrey Faulkner - தென்னாப்பிரிக்கா

 

02. Monty Noble - ஆஸ்திரேலியா

 

03. Learie Constantine - மேற்கிந்திய தீவுகள்

 

04. Stan McCabe - ஆஸ்திரேலியா

 

05. Ted Dexter - இங்கிலாந்து

 

06. Vinoo Mankad - இந்தியா

 

07. Desmond Haynes - மேற்கிந்திய தீவுகள்

 

08. Bob Willis - இங்கிலாந்து

 

09. Andy Flower - ஜிம்பாவே

 

10. Kumar Sangakkara - இலங்கை

views

240 Views

Comments

arrow-up