இன்று அழிக்கப்படவுள்ள 494kg ஹெரொயின்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
29

இன்று அழிக்கப்படவுள்ள 494kg ஹெரொயின்

இன்று அழிக்கப்படவுள்ள 494kg ஹெரொயின்

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 494 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரொயின் போதைப்பொருள் தொகை அழிக்கப்படவுள்ளது.

 

புத்தளம், பாலாவி பகுதியிலுள்ள சீமெந்து நிறுவனத்திற்கு சொந்தமான எரியூட்டியில் இந்த போதைப்பொருள் தொகை அழிக்கப்படவுள்ளது.

 

2021 டிசம்பர் 15ஆம் திகதியன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது 6 வௌிநாட்டு பிரஜைகளிடம் இருந்து 250 கிலோ 996 கிராம் ஹெரொயின் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

 

2022 ஏப்ரல் 19 ஆம் திகதி மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது 7 வௌிநாட்டு பிரஜைகளிடம் இருந்து 243 கிலோ 52கிராம் ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்த சம்பவங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் மேல் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய குறித்த போதைப்பொருள் தொகை அழிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

views

18 Views

Comments

arrow-up