சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்...

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் 5ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் ஊவா மாகாண முதலமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் மாகாண சபையின் கடித தலைப்பை பயன்படுத்தி முன்பள்ளிகளுக்காக ஒரு மில்லியன் ரூபாவை திரட்டி அதனை தனது பெயரில் காசோலையூடாக மாற்றிக்கொண்டதாக முன்வைத்த குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
14 Views
Comments