புதிய முறையில் தேர்தல் பட்டியல் திருத்தம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
17

புதிய முறையில் தேர்தல் பட்டியல் திருத்தம்

புதிய முறையில் தேர்தல் பட்டியல் திருத்தம்

இவ்வருடத்துக்கான தேர்தல் பட்டியலை புதிய முறையின் கீழ் திருத்த தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

 

தேர்தல் பட்டியலின் திருத்தம் ஜூன் 1 ஆம் திகதி தொடங்கப்பட்டதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

 

இருப்பினும், நாட்டில் காணப்படும் கொரோனா தொற்றுநோய் காரணமாக, சுகாதார வழிகாட்டுதல்களின்படி புதிய முறைகளின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

அதன்படி, கடந்த வருடம் தேர்தல் பட்டியலில் வாக்காளரின் பதிவில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென்றால் வசிப்பிடம் தொடர்பான தகவல்களை ஆராய்ந்த பின்னர் மட்டுமே பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

 

நீங்கள் வசிக்கும் இடத்தை மாற்ற விரும்பினால், அப்பகுதியின் கிராம உத்தியோகத்தரைச் சந்தித்து சம்பந்தப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதுமானது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

இதற்கிடையில், முதலாம் தரத்திற்கு குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள்  அல்லது தேர்தல்  பட்டியல் சமர்ப்பிக்க தேவையான தகவல்களை பதிவுசெய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவின் கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேர்தல் ஆணைக்குழுவின் வலைத்தளத்தை www.elections.gov.lk இல் அணுகி அதில் தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு சமீபத்திய வருடங்களின் தகவல்களைப் பெற முடியும் என்றும் ஆணைக்குழு கூறியுள்ளது.

 

அவ்வாறு பெறப்படும் தகவலை கிராம உத்தியோகத்தர் அல்லது வேறு எந்த அதிகாரியும் சான்றளிக்க தேவையில்லை என்பதையும் வலியுறுத்தியுள்ளது.







 

source:adaderana

views

186 Views

Comments

arrow-up