முல்லைத்தீவில் குடும்பத்தை கட்டி வைத்து நகைகள் கொள்ளை

முல்லைத்தீவு (Mullaitivu) பகுதியில் உள்ள வீடொன்றில் குடும்பத்தினரை கட்டி வைத்து விட்டு பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது, முல்லைத்தீவு-மாந்தை கிழக்கு பாட்டாளிபுரம் பகுதியில் இன்று (27)அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையர்கள் களவாடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நட்டாங்கண்டல் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
அண்மைக்காலமாக தமிழர் வாழும் பகுதிகளில் அதிகளவிலான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
217 Views
Comments