வௌ்ள அனர்த்தங்களில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
03

வௌ்ள அனர்த்தங்களில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

வௌ்ள அனர்த்தங்களில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

 பலத்த மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

அதற்கமைய, இரத்தினபுரி -எலபாத்த பகுதியில் வௌ்ள நீரில் மூழ்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

இரத்தினபுரி அயகம பகுதியில் தும்பர பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

அதேபோன்று, இரத்தினபுரி கிரியெல்ல பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, அவிசாவளை - புவக்பிட்டிய எலிஸ்டன் தோட்டப்பகுதியில் வௌ்ளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த
மூவர் உயிரிழந்துள்ளனர்.

 

78 வயதான தந்தை, 36 வயதான மகள் மற்றும் 7 வயதான பேத்தி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 

வீடு வௌ்ளத்தில் மூழ்கிய காரணத்தினாலேயே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன.

 

இதனிடையே, அவிசாவளை ஹேவாயின்ன பகுதியில் மண்மேடு சரிந்து விழ்ந்ததில் 11வயதான சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

 

இதேவேளை, மாத்தறை - தெய்யந்தர பல்லேவெல பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

 

20 மற்றும் 27 வயதுடைய இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

views

229 Views

Comments

arrow-up