அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
03

அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு

அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு

 நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

 

மாத்தறையில் 4 மரணங்களும் இரத்தினபுரியில் 5 மரணங்களும் கொழும்பு சீதாவக்க பகுதியில் 3 மரணங்களும் பதிவாகியுள்ளன.

 

இதுவரை ஐவர் காணாமல் போயுள்ளனனர்.

 

இதனிடையே, 23 மாவட்டங்களைச் சேர்ந்த 87,379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

நாடு முழுவதும் 119 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 23706 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

அடுத்த சில மணித்தியாலங்களில் கம்பஹா நகர் உள்ளிட்ட அதனை அண்மித்த பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கும் அபாயமுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து செல்வதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

இதேவேளை, அனர்த்தங்களை பார்வையிட செல்வதை தவிர்க்குமாறு இடர்முகாமைத்துவ நிலையம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

views

204 Views

Comments

arrow-up