கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

திருகோணமலை - சேருநுவர - மகாவலிகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சேருநுவர பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
235 Views
Comments