முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித்த தெவரப்பெரும காலமானார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித்த தெவரப்பெரும பிற்பகல் காலமானார்.
மத்துகமையில் உள்ள அவரது தோட்டமொன்றில் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானதன் பின்னர் அவர் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து காலமானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1960 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி பிறந்த பாலித்த தெவரப்பெரும 2010 - 2020 காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
அன்னார் உள்நாட்டலுவல்கள் மற்றும் கலாசார பிரதியமைச்சராகவும் வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
250 Views
Comments