தேசிய வெசாக் தின நிகழ்வை நுவரெலியாவில் நடத்த தீர்மானம்

2025ஆம் ஆண்டுக்கான தேசிய வெசாக் தின நிகழ்வை நுவரெலியாவில் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சவை பேச்சாளர், டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தேசிய வெசாக் தின நிகழ்வுகளை நுவரெலியாவில் உள்ள சர்வதேச பௌத்த நிலைய விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய வொசாக் தின நிகழ்வு அடுத்த மாதம் 10 முதல் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
8 Views
Comments