கெஹெலியவிற்கு எதிரான வழக்கு - மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமை நியமிக்க கோரிக்கை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான தரமற்ற மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு மூவரடங்கிய நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதம் பிரதம நீதியரசருக்கு இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தரமற்ற ஹியூமன் இமியூனோ க்ளொபியூலின் தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்தமையூடாக அரசாங்கத்திற்கு பல கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாகவும் நோயாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகவும் தெரிவித்து முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
19 Views
Comments