போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
23

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு நகரை சூழ பொருத்தப்பட்டுள்ள CCTV கெமராக்களின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 4000க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் கொழும்பின் பல பகுதிகளில் CCTV கமராக்கள் பொருத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.

 

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை CCTV கமராக்கள் ஊடாக கண்டறியும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

 

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 724 வாகன விபத்துக்களில் 764 பேர் உயிரிழந்துள்ளனர்.

views

29 Views

Comments

arrow-up