கண்டி நகரை துப்புரவு செய்யும் வேலைத்திட்டம்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
29

கண்டி நகரை துப்புரவு செய்யும் வேலைத்திட்டம்.

கண்டி நகரை துப்புரவு செய்யும் வேலைத்திட்டம்.

கண்டி மாநகரை துப்புரவு செய்யும் வேலைத்திட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

கிளீன் ஸ்ரீலங்கா (Clean Srilanka) செயலகத்தின் ஊழியர்கள் இந்த வேலைத்திட்டத்தில் இணைந்துள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்தார்.

 

இதற்கு மேலதிகமாக பல தன்னார்வ குழுக்களும் துப்புரவு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

கடந்த 10 நாட்களாக நடைபெற்ற ஸ்ரீ தலதா தரிசனம் நிறைவுக்குவந்தது.  

 

இதனையடுத்து கண்டி மாநகரை துப்புரவு செய்யும் வேலைத்திட்டம் பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.

 

ஸ்ரீ தலதா காட்சிப்படுத்தலை முன்னிட்டு மூடப்பட்ட கண்டி நகரிலுள்ள 37 பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் குறிப்பிட்டது. 

views

55 Views

Comments

arrow-up