APR
29
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கைது

முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரரான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஜகத் சமந்த உள்ளிட்ட இருவர் ஆரச்சிகட்டு பகுதியில் வைத்து முற்பகல் கைது செய்யப்பட்டனர்.
கடந்த மார்ச் மாதம் சட்டவிரோத பேரணி நடாத்தியமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பேரணி குறித்து புத்தளம் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
54 Views
Comments