மின் கட்டண திருத்த யோசனை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு

இலங்கை மின்சார சபை தமது மின் கட்டண திருத்த யோசனையை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வினவிய போது, குறித்த யோசனை தொடர்பில் விரைவில் பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணத்தை குறைக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைவாக, ஏனைய நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
228 Views
Comments