தாக்குதலுக்குள்ளான சிறுமி நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு; ஐவருக்கு விளக்கமறியல்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
05

தாக்குதலுக்குள்ளான சிறுமி நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு; ஐவருக்கு விளக்கமறியல்

தாக்குதலுக்குள்ளான சிறுமி நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு; ஐவருக்கு விளக்கமறியல்

சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்த, சிறுமி கடுமையாக தாக்கப்படும் சம்பவம் தொடர்பில் 
கைது செய்யப்பட்ட ஐவரும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

 

அவர்கள் இன்று பிற்பகல் பதவிய சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

சிறுமியின் தாய், சித்தப்பா, பெண்கள் இருவர் உள்ளிட்ட ஐவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான குகுல் சமிந்த எனும் நபரும் மற்றுமொரு சந்தேகநபரும் இன்று அதிகாலை புல்மோட்டை அரிசிமலை பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

 

சிறுமியின் தாயை உளநல வைத்தியர் ஒருவரிடம் அனுப்பி அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

சிறுமியை அனுராதபுரம் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.
 

views

260 Views

Comments

arrow-up