Night Club சென்ற யோஷித - பாதுகாப்பு அதிகாரி காயம்

யோஷித ராஜபக்ஸவுடன் சென்ற சிலர் நடத்திய தாக்குதலில் கொழும்பு யூனியன் பிளேஸ், பார்க் வீதியிலுள்ள இரவு களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.
யோஷித ராஜபக்ஸ மற்றும் அவரது மனைவியுடன் இந்தக் குழுவினர் இன்று(22) அதிகாலை இரவு களியாட்ட விடுதிக்கு வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யோஷித ராஜபக்ஸவும் அவரது மனைவியும் இரவு களியாட்ட விடுதி வளாகத்திற்குள் நுழைய முற்பட்ட போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இரவு களியாட்ட விடுதிக்குள் நுழையும்போது கைகளில் அடையாளம் காண்பதற்கான பட்டியை அணியுமாறு அறிவுறுத்தியுள்ளர்.
இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக இரவு களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியாலையில் சிகிச்சை பெறுகின்றார்.
சம்பவம் தொடர்பாக கொம்பனித்தெரு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
31 Views
Comments