இன்றும் சம்பள பேச்சுவார்த்தைக்கு செல்லாத பெருந்தோட்ட நிறுவனங்கள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பாக இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையிலும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.
இதனால் சம்பளப் பிரச்சினை தொடர்பில் இன்றும் இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக்கொள்ள முடியாமற்போனது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலான இன்றைய பேச்சுவார்த்தை நாரஹேன்பிட்டியிலுள்ள தொழில் அமைச்சில் நடைபெறவிருந்தது.
தொழில் ஆணையாளர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தைக்காக வருகை தந்திருந்த போதிலும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் எவரும் இதன்போது சமூகமளித்திருக்கவில்லை.
245 Views
Comments