நான்கு விளையாட்டு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்

நான்கு விளையாட்டு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் பதிவுகளை இடைநிறுத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
சைக்கிளோட்ட சம்மேளனம், ரக்பி சம்மேளனம், மோட்டார் விளையாட்டு சங்கம், வலைப்பந்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் பதிவுகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் தேர்தல்கள் உரிய முறையில் நடத்தப்படும் வரை, மே 29 முதல் அவற்றை விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் கீழ் பட்டியலிட்டுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் நிர்வாகத்திற்காக இடைக்கால குழுக்கள் நியமிக்கப்பட மாட்டாது என விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக இந்த வர்த்தமானி அறிவித்தலின் பின்னர் வௌியிடப்பட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் தேர்தல்களை உரிய முறையில் நடத்துவதற்காக மாத்திரமே குறித்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
204 Views
Comments