இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஆதரவு - இலங்கைக்கான தென் கொரிய தூதுவர்

தென் கொரியா - இலங்கை இடையிலான நீண்டகால உறவு பேணப்பட்டு இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தென் கொரியா ஆதரவளிக்கும் என இலங்கைக்கான தென் கொரியத் தூதுவர் மியோன் லீ தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் அசோக ரன்வல்ல - தென்கொரிய தூதுவர் இடையே பாராளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பில் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி அவற்றை துரிதப்படுத்தும் நடவடிக்கை மற்றும் கண்டி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கை - தென் கொரியா இடையிலான உறவை தொடர்ந்தும் வலுப்படுத்த தாம் எதிர்பார்த்துள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல்ல இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீரவும் பிரசன்னமாகியிருந்தார்.
130 Views
Comments