இராணுவத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் அடித்துப் படுகொலை

இரத்னபுரி - சிறிபாகம பகுதியில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிற்றுண்டி விற்பனையாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 4ஆம் திகதியன்று சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடவல கிலிமலே வெலேகொட வீதியில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 23 வயதுடைய குறித்த பெண் இதற்கு முன்னர் இராணுவத்தில் பணியாற்றியவர் எனவும், இதன்போது, பொல்லால் தாக்கப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிற்றுண்டி விற்பனையாளர் பல தடவைகள் அவரை திருமணம் செய்ய வற்புறுத்திக் கேட்ட போதும் அவர் அதனை மறுத்துவிட்டதாக குடும்பத்தினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது, குறித்த யுவதி இரத்தினபுரி நகருக்கு சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த சந்தேகநபர் தாக்கி கொலை செய்துள்ளார்.
கொலைக்கு பயன்படுத்திய பொல்லினை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், சம்பவம் நடந்த இடத்தில் ரத்தக்கறைகளும் காணப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
97 Views
Comments