இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சியை விற்பனை செய்வதற்கும் நுகர்வதற்கும்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
DEC
07

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சியை விற்பனை செய்வதற்கும் நுகர்வதற்கும்

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சியை விற்பனை செய்வதற்கும் நுகர்வதற்கும்

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சியை விற்பனை செய்வதற்கும் நுகர்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடு மாநிலம் முழுவதுமுள்ள உணவகம், விடுதிகள் மற்றும் உள்ளூர் கொண்டாட்ட நிகழ்வு உள்ளிட்ட அனைத்துக்கும் பொருந்தும் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த தடையுத்தரவு பிறப்பிட்டுள்ளது.

இதனை மீறும் பட்சத்தில் 8 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மாட்டிறைச்சி உண்பது தொடர்பாக தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் செய்து புதிய விதிகளை இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே மாநிலத்திலுள்ள வழிபாட்டு தலங்களை சூழ 5 கிலோமீற்றர் பகுதிகளுக்கு மாட்டிறைச்சி விற்பனைக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் தற்போது ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த தடைக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

views

107 Views

Comments

arrow-up