இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் உப தலைவருக்கு பிணை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
29

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் உப தலைவருக்கு பிணை

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் உப தலைவருக்கு பிணை

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் உப தலைவர் எல்.ஏ.விமலரத்னவை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திஸ்ஸமஹராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

சந்தேகநபரை 50 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இதற்கு மேலதிகமாக 6 மாதங்களுக்கு ஒருதடவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

கதிர்காமம் பகுதியிலுள்ள ராஜபக்ஸ குடும்பத்தினருக்கு சொந்தமானது என கூறப்படும் வீடு குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் உப தலைவர் அம்பலாந்தோட்டை - மாமடல பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று(29) காலை அவர் கைது செய்யப்பட்டார்.

 

குறித்த வீட்டின் நிர்மாணத்திற்கு சந்தேகநபர் முழுமையான தலையீடு செய்துள்ளதுடன் நிதிதூய்தாக்கல் தடுப்புச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்துள்ளது.

views

8 Views

Comments

arrow-up