தெவிநுவர இரட்டை படுகொலையில் துபாய் ஒப்பந்தம்: அதிரடியாக மூவர் கைது!

தெவிநுவர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு அருகில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டை துபாயில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் “பாலே மல்லி” எனப்படும் ஷெஹான் சத்சர என்ற பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒருவரால் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் தெவிநுவர பகுதியைச் சேர்ந்த பசிந்து தாரக, 29, மற்றும் யோமேஷ் நதீஷன் ஆகிய இருவர் ஆவர்.
இவர்கள் தெவிநுவர, கபுகம்புரவில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
அவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, வான் ஒன்றில் பின்தொடர்ந்த குழு, அவர்களை மோதி, இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
எனினும், அவர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படும் வான், கொலை நடந்த இடத்திலிருந்து சுமார் 800 கிலோமீற்றர் தூரத்தில் தீ வைத்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
34 Views
Comments