முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த எழுத்தாணை மனு தள்ளுபடி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
29

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த எழுத்தாணை மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த எழுத்தாணை மனு தள்ளுபடி

தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை விசாரணை எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.

 

மேன்முறையிட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி மொஹமட் லஃபார் தாஹீர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

களனி பிரதேச செயலக பிரிவில் அரச காணியொன்றை முறையற்ற விதத்தில் கையகப்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

இது தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட சிலர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

views

56 Views

Comments

arrow-up