டிப்பர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி - நுணாவிலில் இன்று(12) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டிப்பர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில், சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
183 Views
Comments