கைதிகளுடன் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் அறிவுறுத்துகிறார்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
07

கைதிகளுடன் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் அறிவுறுத்துகிறார்

கைதிகளுடன் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் அறிவுறுத்துகிறார்

ஹொரணையில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையின் மறுசீரமைப்பின் போது பெண் கைதிகளுடன் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.

 

ஹொரணை, மில்லேவ பிரதேசத்திலுள்ள 200 ஏக்கர் நிலப்பரப்பில் வெலிக்கடை சிறை வளாகத்தை புனரமைக்கும் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆராய ஜூம் தொழிநுட்பத்தின் ஊடாக அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் பங்கேற்றார்.

 

ரூ .30 பில்லியன் செலவில் இந்த திட்டம் 2024 க்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளது.

 

நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் திட்டங்களுக்கு பொது கருவூலத்தில் இருந்து நிதி ஒதுக்கீடு இல்லாததால், அரசுக்கு சுமை இல்லாமல் மாற்று வழிகள் மூலம் திட்டத்தை முடிக்க நம்புகிறேன் என்று இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா பிரதமருக்கு தெரிவித்தார்.

 

இதற்கிடையில், நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்கனவே வெலிக்கடை சிறை வளாகம் மற்றும் பொரெல்லையில் உள்ள சிறைச்சாலை தலைமையக கட்டிடத்தை ஒரு ஹோட்டல் திட்டத்திற்காக ஒதுக்கி வைக்க திட்டமிட்டுள்ளது.

 

அது தவிர, 35 ஏக்கர் நிலம் மற்ற முதலீடுகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது மற்றும் பல முதலீட்டாளர்கள் ஏற்கனவே அதன் திட்டங்களுக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.


அதன்படி, ஏற்கனவே முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தவர்களைத் தவிர, வேறு முதலீட்டாளர்கள் இருந்தால், அவர்களை அழைக்குமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

source:hirunews

views

114 Views

Comments

arrow-up