பெலியத்த பஸ் விபத்தில் 30 பேர் காயம்

பெலியத்த - ஹெட்டியாரச்சி வளைவு பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மற்றும் தனியார் பஸ் ஆகியன மோதிய விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
திக்வெல்ல பகுதியிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த தனியார் பஸ் மற்றும் பெலியத்தையிலிருந்து திக்வெல்ல நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஆகியன நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த 30 பேர் தங்காலை மற்றும் பெலியத்த வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பெலியத்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
7 Views
Comments