சிறுமியை பாலியல் வன்புணர்விற்குட்படுத்தியவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

சிறுமியை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய ஒருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் இன்று (11) தீர்ப்பளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், 25,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
11 வருடங்களுக்கு முன்னர் 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய வழக்கில், சந்தேகத்திற்கிடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதி, அபராதத் தொகையைச் செலுத்த தவறினால், ஆறு மாத சிறைத்தண்டனையையும், இழப்பீட்டுத் தொகையான ஐந்து இலட்சம் ரூபாவை செலுத்தத் தவறினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையையும் அனுபவிக்க நேரிடும் என மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
216 Views
Comments