10 நாட்களில் 971 டெங்கு நோயாளர்கள் பதிவு

நிலவும் மழையுடனான வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 10 நாட்களில் 971 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதிகமான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதுடன், 9441 நோயாளர்கள் இங்கு பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரையான காலப்பகுதிக்குள் 9 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
டெங்கு நோயாளர்கள் தொடர்ந்தும் அதிகரித்து செல்வதால், தமது சுற்றுச்சூழலை துப்பரவாக வைத்துக்கொள்ளுமாறு தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருப்பின், உடனடியாக வைத்தியரை நாடுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
238 Views
Comments