தன் சாதனையை தானே முறியடித்த தளபதி விஜய்…

நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டுவிட்டரில் புதிய சாதனை படைத்துள்ளது.
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 21ஆம் திகதி மாலை 6 மணிக்கு டுவிட்டரில் வெளியிடப்பட்டது.
ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த போஸ்டர் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 78 ஆயிரம் லைக்குகள் பெற்று இந்திய அளவில் அதிக லைக்குகளைப் பெற்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்ற சாதனையை படைத்துள்ளது.
இதற்குமுன் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2 லட்சத்து 76 ஆயிரம் லைக்குகளை பெற்றதே சாதனையாக இருந்த நிலையில் அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
842 Views
Comments