பீஸ்ட் படத்திற்கு தளபதி விஜய்க்கு 100 கோடி ரூபாய் சம்பளம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் அவரது 65ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் பீஸ்ட் என படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெளியிடப்பட்டிருந்தது.
இப்படத்திற்கு தளபதி விஜய்க்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் அதில் ஏற்கனவே 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதை மையமாகக் கொண்டு இவர் தெலுங்கில் அறிமுகமாகும் வம்சி இயக்கத்தில் தில்ராஜ் தயாரிக்கும் படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் முடிவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐடி சோதனையின்போது, விஜய் பிகில் படத்திற்கு 50 கோடி ரூபாய் சம்பளமும், மாஸ்டர் படத்திற்கு 80 கோடி ரூபாய் சம்பளமும் வாங்கியிருந்தார். இதைக் கருத்திற் கொண்டும் மாஸ்டர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை கருத்திற் கொண்டும் இவரது சந்தை பெறுமதியை கருத்திற் கொண்டும் தற்போது பீஸ்ட் படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது.
மேலும், தலைவர் சூப்பர் ஸ்டார் தர்பார் படத்திற்கு 90 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் சம்பளத்தை பீஸ்ட் படத்தில் தளபதி விஜய் முறியடித்துள்ளார்.
769 Views
Comments