இந்த வருட இறுதிக்குள் உலக மக்கள்தொகையில் 40 சதவீதம் தடுப்பூசி வழங்கும் திட்டம்...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
07

இந்த வருட இறுதிக்குள் உலக மக்கள்தொகையில் 40 சதவீதம் தடுப்பூசி வழங்கும் திட்டம்...

இந்த வருட இறுதிக்குள் உலக மக்கள்தொகையில் 40 சதவீதம் தடுப்பூசி வழங்கும் திட்டம்...

இந்த வருட இறுதிக்குள் உலக மக்கள்தொகையில் 40 சதவீதம் தடுப்பூசி வழங்குவதற்கான திட்டத்தை ஜி 20 சுகாதார அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.

உலகின் முன்னணி 20 பொருளாதாரங்கள் மற்றும் ஐரோப்பிய சங்கம் அடங்கிய ஜி 20 குழுமத்தின் சுகாதார அமைச்சின் மாநாடு இத்தாலியின் ரோம் நகரில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.

மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், கொரோனா வைரஸின் உலகளாவிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மற்றும் உலகப் பொருளாதாரத்தை புதுப்பிக்க வலுவான பலதரப்பு ஒத்துழைப்பு தேவை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் வறுமை, காலநிலை மாற்றம், மாசுபாடு, அமைதி மற்றும் நீதி ஆகியவற்றுக்கான உலகளாவிய சவால்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

views

179 Views

Comments

arrow-up