ஷேக் ஹசீனாவுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்க கோரிக்கை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
21

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்க கோரிக்கை

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்க கோரிக்கை

பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை பிறப்பிக்குமாறு பங்களாதேஷ் சர்வதேச பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

பங்களாதேஷ் பொலிஸின் தேசிய மத்திய பணியகத்தினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

கடந்த வருடம் பிரதமர் ஷேக் ஹசீனாவின்  அரசாங்கத்திற்கு எதிராக பங்களாதேஷில் பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

 

இதனையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கப்பட்டதுடன் அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

 

அவரை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வந்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பங்களாதேஷ் பொலிஸாரினால் சர்வதேச பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

views

21 Views

Comments

arrow-up