தென் கொரியாவில் விபத்திற்குள்ளான விமானம்

தென் கொரியாவில் விமானமொன்று தரையிறங்கும் போது (29) காலை விபத்திற்குள்ளாகியுள்ளது.
175 பயணிகள் மற்றும் 6 விமான பணிக்குழாத்துடன் தாய்லாந்தில் இருந்து வருகை தந்த விமானம் தென் கொரியாவின் முவான்(Muan) சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போது விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தை தொடர்ந்து விமானம் தீப்பற்றியதுடன் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டனர்.
குறித்த விமானத்தில் 173 தென் கொரிய பிரஜைகளும் 2 தாய்வான் பிரஜைகளும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
80 Views
Comments